ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது
ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குவர்.