ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை வாழ்த்துகிறோம்: கருவிடம் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

🕔 September 4, 2019

“ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை மாலைதீவிலிருந்து தாம் பெற்றுக் கொண்டதாகவும் இதன்போது மஹிந்த அமரவீர கூறினார்.

ஆயினும் இதற்கு எவ்வித பதிலையும் சொல்லாத கரு ஜயசூரிய, வெறுமனே புன்னகைத்தார்.

கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னதாக, நேற்று இந்த வாழ்த்தினை மஹிந்த அமரவீர பகிர்ந்து கொண்டார்.

ஐ.தே.கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாலைதீவுக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்