மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்
மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணம் செப்டம்பர் 17ஆம் திகதி கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அவரின் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
33 வயதான நாமல் ராஜபக்ஷ, லிமினி வீரசிங்க எனும் தனது காதலியைத் திருமணம் செய்யவுள்ளார். இவர் பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வியாவார்.
நாமலின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தனது இளைய சகோதரர் யோசித ராஜபக்ஷவின் திருமணம் கடந்த ஜுலை 12ஆம் திகதி நடைபெற்றதை அடுத்து, தனது காதலியின் படத்தை சமூக வலைத்தளத்தில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டிருந்தார்.
நாமலின் திருமணம் நடைபெறவுள்ள செப்டம்பர் 17ஆம் திகதியானது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் வில்லியம் கொபல்லாவ மற்றும் ஜே.ஆர். ஜயவர்த்தன ஆகியோரின் பிறந்த தினம் என்பதோடு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது இளைய சகோதரர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர்தான், நாமல் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
08ஆம் இலக்கம் மஹிந்த ராஜபக்ஷவின் விருப்புக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.