அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு

🕔 September 3, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இன்று கலந்து கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தேசிய காங்கிரசும் அங்கம் வகிக்கின்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் அதாஉல்லா கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டணி அமைத்துள்ள ஏனைய கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண மற்றும் டி.யூ. குணசேகர ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய மாநாட்டில் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்