சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு
– எம்.வை. அமீர் –
சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவரும் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது, கிராமசேவை உத்தியோகத்தர் எம்.ஹைதக் உள்ளிட்ட பிரமுகர்களும் விளையாட்டு வீரர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.