சினிமா வாய்ப்புக்காக இந்தியாவில் அலைந்திருக்கின்றேன்: கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமைச்சர் மனோ
– அஸ்ரப் ஏ சமத் –
நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின் கலைஞா்களைப் போன்று, தமிழ் மொழி கலைஞா்களுக்கு பாராட்டும் கௌரவமும் ஒரு போதும் கிடைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த நிலைமை நிச்சயம் மாற வேண்டும் என்றும், காலத்தினைக் கடத்தாது அதனை நிச்சயம் மாற்றிக் காட்டல் வேண்டும் எனவும் கூறிய அமைச்சர், ஆகவேதான் தனது அமைச்சின் ஊடாக தமிழ் பேசும் கலைஞர்களுக்கு அரச விருது வழங்கத் தீர்மானித்தாகவும் கூறினார்.
அமைச்சா் மனோ கனேசனின் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து கலாச்சாரத் திணைக்களத்தின் ஊடாக, இந்த நாட்டில் உள்ள தமிழ் மொழிக் கலைஞா்கள் 220 பேருக்கு அரச விருது வழங்கி பாராட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நெலும் பொக்குன – தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார்.
அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்;
“இந்த கௌரவிப்பு விழா ஒரு விநாயகர் விழாவாகும். இனி இந்த இந்து கலாச்சாரத் திணைக்களம் எதிா்காலத்திலும் இந்தப் பணியை தொடா்ந்து முன் எடுத்தல் வேண்டும். நான் அமைச்சராக இல்லாவிட்டாலும் நான் வித்திட்ட இந்தப் பணி தொடார வேண்டும்; அதுவே எனது அவாவாகும்.
வேறு அமைச்சு இதனை சரிவர செய்யாத காரணத்தினால்தான். இந்த விவகாரத்தினை எனது அமைச்சுக்குள்ளே கொண்டு வந்து சோ்த்துள்ளோம்.
இங்கு காட்டப்பட்ட கானொளியில் மறைந்த கலைஞா்களது புகைப்படங்களுள் எனது தந்தை கனே\னின் புகைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. அவா் இயற்றி நடித்த படம்தான் ‘நான் உங்கள் தோழன்’ என்ற ஈழத்து தமிழ் திரைப்படமாகும். அந்த ஈழத்து திறைப்படத்தில் ஒரு சாதனையை அவர் செய்துள்ளார். அவா் ஒரு காலத்தில் ஈழத்து திறைப்படத்துறையை தட்டி எழுப்பினார். இலங்கையில் இனவாதமும். மதவாதமும் செயற்பட்ட காலத்தில் எமது ஈழத்து கலையும் காணாமல் போய்விட்டது.
இலங்கையில் தமிழ் கலைஞா்கள் பாராட்டுக்களுக்கும் விருதுகளுக்கும் எதிா்பாத்து நமது கலையைப் பணிகளைத் தொடரவில்லை. அவா்கள் எதனையும் எதிர்ப்பாக்காமல் தொடா்ந்து பணியைத் தொடரல் வேண்டும்.
நம்நாட்டு தமிழா்கள் கனடாவிலும், ஜரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் புலம் பெயர்ந்து வாழ்கின்றனா். அவர்கள் நமது தாய் நாடு இலங்கை என்ற உணர்வுடன், நமது கலை கலாச்சாரத்தினை உலககெங்கும் எடுத்துச் செல்லல் வேண்டும். அதற்காக அவா்கள் இந்த கலைஞா்களுக்கு கைகொடுத்து உதவ முன்வருதல் வேண்டும்.
எனது தந்தை ஒரு கலைஞா் அவர் நினைவாக இந்த கலைஞா்களை கௌரவிப்பது நான் செய்த பெரும் பாக்கியமாகும். நானும் எனது தந்தை தயாரித்த ‘உதய காற்று’ படத்தில் சிறுவயதில் வில்லனாக நடித்துள்ளேன். 1980களில் இந்திய சினிமாவில் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று அங்கு சுற்றித் திரிந்த நினைவுகளும் உள்ளன.
வாழ்நாள் சாதனையாளர்களாக மூத்த கலைஞர்கள் 12 பேரை இன்று கௌரவித்துள்ளோம். மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்களை அடையாளம் காணப்பட்டு – அவர்களையும் இளம் கலைஞா்களையும் நாம் கௌரவித்துள்ளோம். சில மூத்த கலைஞா்கள் விண்ணப்பிக்காமலேயே, நாம் அவா்களைத் தேடிப்போய் இங்கு கூட்டி வந்துள்ளோம்” என்றார்.