நிந்தவூரில் யானைகள் அட்டகாசம்; உடமைகளுக்கும் சேதம்

🕔 September 3, 2019

பாறுக் ஷிஹான்

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அதிகளவான யானைகள் பொதுமக்களின் வீடுகள் தோட்டங்கள் உணவகங்கள் என்பவற்றினைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளன.

இவ்வாறு  யானைகள் திடிரென  நுழைந்து சுவர்களை உடைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மற்றும் உணவுகளையும் முற்றாகச் சேதப்படுத்தியுள்ளன. அத்துடன்  தென்னை மரங்கங்கள் வாழை மரங்கள் என்பவற்றையும்   பிடுங்கி வீசியுள்ளன.

இந்த நிலை தொடருமானால் சொத்துக்களுக்கு சேதங்களும் அழிவுகளும் ஏற்படும் என்றும் இது விடயத்தில் பிரதேச செயலாளர்  உள்ளிட்ட அதிகாரிகள்  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்