கல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை

🕔 August 30, 2019

லகத்தினை ஏற்படுத்தியமை, அதனூடாக பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமை பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சியோன் தேவாலய தற்கொலைக குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கல்லடி பாலத்தை மறித்து போக்குகுவரத்துக்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் குண்டு தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான செல்வி மனோகர், சுஜீகலா உட்பட ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியது, போக்குவரத்தினை தடைசெய்தது போன்ற குற்றச்சாட்டுகள் சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன. 

விசாரணைகளை தொடர்ந்து ஐந்து பேரும், தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, ஒக்டோபர் 04ஆம் திகதி வழங்க ஒத்தி வைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்