125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல்

🕔 October 16, 2015
Remand - 01ஞ்சமாக 125 மில்லியன் ரூபாயினைப் பெற்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்காக, வௌிநாட்டு நிறுவனமொன்று கொண்டு வந்த சில பொருட்களை விடுவிப்பது தொடர்பில் 125 மில்லியன் ரூபாயினை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட லஞ்சத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்