அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம்

🕔 August 26, 2019

ங்வெல்லை – பஹத்கம பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

முகத்தை மறைக்கும் தலைகவசத்துடன் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மேற்படி இருவரும் கொல்லப்பட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 43 வயதுடைய வர்த்தகர் ஒருவரும், 32 வயதுடைய அவரின் உதவியாளருமே பலியாகினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்