இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு
🕔 August 23, 2019
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, ராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழிற்பயிற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரவி ஜயவர்தன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை இங்கி வருகிறது.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)