நாவிதன்வெளியில், தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு

🕔 August 22, 2019

பாறுக் ஷிஹான்

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. மோகனகுமார் வளவாளராக கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கில், தேசிய தொழில் முயற்சிக்கான அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். நிஜந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வியாபார உத்திகள், சந்தைப்படுத்தல் தொடர்பான நோக்கங்கள், சுயதொழில் ஊக்குவிப்பு தொழில்கள் தொடர்பாக வளவாளரால் விளக்கமளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்