கவிஞர் ஜௌபர்கான், சாஹித்திய விருது பெறுகிறார்

🕔 October 15, 2015

Jawfer khan - 012– பழுலுல்லாஹ் பர்ஹான் –

சிரேஷ்ட ஊடகவியலாளரும், தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல். ஜவ்பர்கான் 2015ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த நூலாக, கவிஞர் ஜவ்பர்கான் எழுதிய ‘முறிந்த சிறகும் என் வானமும்’ என்கிற கவிதை நூலுக்காக, இந்த சாஹித்த விருது வழங்கப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியவாதியாகவும், முழு நேர ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவரும் ஜவ்பர்கான், ஏற்கனவே, தேசிய சாஹித்ய மண்டல விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

08 நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார்.

இம்மாத இறுதியில் கிழக்கு மாகாண சபையால் நடாத்தப்படும் மாகாண இலக்கிய விழாவில், இவருக்கான விருதும் கௌரவமும் வழங்கப்படவுள்ளதாக மாகாண கலாசார பணிப்பாளர் ஏ.எல். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்