சதொச நிறுவன முன்னாள் அதிகாரிக்கு ஒரு வருட சிறையுடன், தண்டமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பை வழங்கினார்.
1000 மெட்றிக் தொன் வெள்ளை அரிசியை, கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக விற்பனை செய்தமையின் மூலம், அரசாங்கத்துக்கு 40 லட்சம் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது குற்றவாளி 50 ஆயிரம் ரூபாய் தண்டமாகச் செலுத்த வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.