கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்டி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நாடு அபிவிருத்தியடையும் என்று, தான் நம்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத்துக்கு கோட்டா வந்துவிட்டால், நாடு முற்று முழுதாக அழிந்து விடும் என, தான் அச்சப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.