பிணைமுறி மோசடி வழக்கு: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்து, ஆஜர்படுத்துமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராக அர்ஜுன மகேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில், அதன் முன்னாள் ஆளுநரை கைதுசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவைக் கோருவதற்கான காரணங்கள் ஏதாவது இருந்தால், அதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை ஓகஸ்ட் 09ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, உச்ச நீதிமன்றம் ஜுலை 24ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன், மத்திய மத்திய பிரதி ஆளுநர் பதினிகே சமரசிரி, பேபெச்சுவர் ட்ரசரீஸ் லிமிடெட் உரிமையாளர் அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், தலைமை நிர்வாக அதிகாரி கசுன் ஓஷாதி பாலிசேனா, தலைவர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், இயக்குநர்கள் புஷ்யமித்ரா குணவர்தன, சிட்டா ரன்ஞன் ஹுலுகல்ல, முத்துராஜ சுரேந்திரன் மற்றும் அஜான் கார்டியே புஞ்சிஹேவா ஆகியோர் பிணைமுறி மோசடி வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பிணைமுறி ஏலத்தின் மூலம் 10.058 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.