சஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் ஜாமாத்தின் 113 கோடி ரூபாய் சொத்து, பணம் முடக்கம்: நீதிமன்றுக்கு அறிவிப்பு
தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தலைவர் சஹ்ரானின் கோடிக் கணக்கான சொத்துக்களும் பணமும் முடக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றுத்கு அறிவித்துள்ளனர்.
100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் 13 கோடி ரூபா பணமும் முடக்கப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஷாணி அபேசேகர இதனை நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
113 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களில் வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலை, தங்க ஆபரணங்கள் ஆகியன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி சஹ்ரான் தலைமையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் 200க்கும் அதிகமானோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.