காஷ்மீர் இப்படித்தான் இந்தியாவிடம் களவு போனது
– கிரிஷ்ணவேல் (இந்தியா) –
இந்த நிமிடம் வரை நம்மில் பலர், ஏதோ காஷ்மீர் நமது இந்தியாவின் ஒரு பகுதி, அது ஒரு அடங்காத பிள்ளை, அந்த பிள்ளையை அடக்கி நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் மோடி என்பது போல நினைத்துக் கொண்டு பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா – பாகிஸ்தான் சுதந்திரம் கிடைத்த பிறகு, காஷ்மீர் தனி நாடாக தான் இருந்தது
அதற்கு ஒரு பிரதமர் இருந்தார். அதாவது ‘பிரதம மந்திரி’ என்று, நேரு இந்தியாவுக்கு பிரதமராக இருந்தது போல, காஷ்மீர் நாட்டுக்கும் ஒருவர் ‘பிரதமராக’ இருந்தார்.
பாகிஸ்தானில் இருந்து சில அடிப்படைவாத சக்திகள் காஷ்மீருக்கு உள்ளே புகுந்த போது, அந்த நாட்டின் அரசர் ஹரி சிங், நேருவிடம் உதவி கேட்கிறார்.
நேருவும் இந்திய ராணுவத்தை காஷ்மீர் நாட்டுக்கு உதவிக்கு அனுப்புகிறார்.
சில காலம் பொறுத்து, காஷ்மீரின் ‘பிரதம மந்திரி’ என்ற பதவியின் பெயரை ‘முதல் மந்திரி’ (அதாவது Prime Minister என்ற பெயரை Cheif Minister) என்று மாற்றுங்கள் என்று நேரு சொல்லி, அப்படி நீங்கள் மாற்றினால், உங்கள் அண்டை நாடான பாகிஸ்தான் உங்களுக்கு எதிராக செய்யும் வேலைகளுக்கு, இந்தியா என்ற எங்கள் நாடு உதவி செய்யும் என்று கூறி ஏமாற்றுகிறார்.
ஆர்டிகிள் 370 என்பது இந்தியா மற்றும் காஷ்மீர் என்ற இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.
இப்போது என்ன நடந்து இருக்கிறது என்று நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்.
நம் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டு சாவியை நம்மிடம் கொடுத்து; “என் பிள்ளைகள் ‘பார்க்’கில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வந்து கேட்டால் சாவியை கொடுங்கள்” என்று கூறி நம்மிடம் கொடுத்த சாவியை வைத்து,அந்த வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் நாம் திருடினால் எப்படி இருக்கும்?
அதைத்தான், இப்போது…
இந்தியா செய்து கொண்டே இருக்கிறது.