இந்தியாவின் வெளிவிவகார முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

🕔 August 7, 2019

ந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், ‘நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்’ என்று> காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தார்.

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

வழக்கறிஞரான சுஷ்மா ஸ்வராஜ் பா.ஜ.கட்சியின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.

இவர் தனது 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார்.

1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.

1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சராக பணியாற்றி இருந்தார்.

இவரின் மறைவு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில், ‘இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சராக, இவர் பல தடவை இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்