சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 575 வாகனங்களைக் காணவில்லை: பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

🕔 August 6, 2019

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, 1704 வாகனங்களை காதார அமைச்சு இதுவரையில் இழந்துள்ளதாக, அந்த அமைச்சில் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசேட தணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தமது அறிக்கையை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) ஒப்படைக்க, தணிக்கையாளர் ஜெனரல் பரிந்துரைத்துள்ளார்.

CA / 1/17/1 சுற்றறிக்கையின்படி சுகதார அமைச்சுக்கு சொந்தமான மூன்று வாகனங்களை மட்டுமே, அதற்குரிய அமைச்சர் பயன்படுத்த முடியும்.

ஆனால் அவர் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்