அனோமா, லக்கி: ராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்
அனோமா கமகே மற்றும் லக்கி ஜயவர்த்தன ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக இன்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன்படி அனோமா கமகே – பெற்றோலிய வளத்துறை ராஜங்க அமைச்சராகவும், லக்கி ஜயவர்தன – நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி ராஜங்க அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் இருவரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.