ஐ.தே.க. கூட்டணி, இந்த மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும்: ரணில்

🕔 August 5, 2019

க்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, இந்த மாதம் இறுதிக்குள் உருவாக்கப்பட்டு, கைச்சாத்திடப்படும் என்று, ஐ.தே.கட்சி தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசங்கி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில், அதன் நட்புக் கட்சிகளை இணைத்தக் கொண்டு ‘ஜனநாயக தேசிய முன்னணி’ எனும் பெயரில்  கூட்டணிக்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

எனினும், அந்த கூட்டம் மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில், கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடியை அடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியலரங்களில் பேசப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்