பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில் இணைகின்றார்கள்

🕔 August 3, 2019

நாடாளுமுன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளதாக, ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் கருதி தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “நான் 45 ஆண்டுகளாக சுதந்திரக் கட்சியில் பணியாற்றினேன். நான் மத்திய கொழும்பு அமைப்பாளராகவும் இருந்தேன், ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனது வாக்காளர்களில் பாதியை பைசர் முஸ்தபாவுக்குக் கொடுத்தார். பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு மிகுதி பாதியையும் கொடுத்தார்.

நான் இப்போது சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் இல்லை, நான் வெளியேறி விட்டேன். எனது அரசியல் எதிர்காலம் குறித்து நான் ஒரு முடிவை எடுப்பேன், ஆனால் நான் எனது குழுவினரைத் தாண்டி செல்லமாட்டேன். விரைவில் ஒரு முடிவை எடுப்பேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்