குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து

🕔 August 2, 2019

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று வியழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

இன்று காலை இந்த விடயம் தொடர்பில் மீண்டும் விவாதித்த பின்னர், இடமாற்றத்தை இரத்து செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

டொக்டர் ஷாபி விவகாரத்தில் தலையீடுகளற்ற விசாரணையை மேற்கொள்ளும் பொருட்டு, மேற்படி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

தொடர்பான செய்தி: டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்