இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை, மாலைதீவில் நிறுவுதல் குறித்து பேச்சு
இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று வெள்ளிக்கிழமை உயர் கல்வி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை மாலைதீவில் நிறுவுவது குறித்தும் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வாவும் கலந்துகொண்டார்.
(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)