631 பட்டதாரிகளுக்கு, அம்பாறை மாவட்டத்தில் பயிலுநர் நியமனம்

🕔 August 1, 2019

பாறுக் ஷிஹான்

வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  அம்பாறை  ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒரு வருட பயிற்சியினை பெற வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

வேலையற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட உள்வாரி  வெளிவாரி பட்டதாரிகள் 16800 பேர்களின் நியமனக்கடிதங்கள் அலரிமாளிகை மற்றும் மாவட்டச் செயலகங்கள் ரீதியாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 631 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்  டி.எம்.எல். பண்டாரநாயக தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அனோமா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்கள்களான எம்.ஜ.எம். கலாநிதி  எஸ்.எம். இஸ்மாயில் மற்றும் அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மும் மொழி மூல பட்டதாரிகளும் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய  அலுவலகங்களுக்கு இரண்டாம் திகதி முதல் தங்களது கடமையை பொறுப்போற்கும் வகையில் இவர்கள் இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்