கல்முனை மாநகர சபையில் இரு புதிய உறுப்பினர்கள் பங்கேற்பு

🕔 July 31, 2019


– பாறுக் ஷிஹான்

ல்முனை மாநகர சபையில் புதிய இரு  உறுப்பினர்கள் அமர்வில் பங்கேற்றதுடன் கன்னி உரைகளையும் ஆற்றினர்.

கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  நேற்று செவ்வாய்கிழமை சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்   தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது சுகாதார பிரிவு குழுத்தலைவர் ஏ.எம். அஷீஸ் சுகாதார முன்னெடுப்புக்கள் தொடர்பிலும்  மாநகர சபையினால் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலுமான தமது கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

தொடர்ந்து பொது சேவை குழுவினரினால் முன்வைக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை சபை விரிவாக ஆராய்ந்தது. அதன் ஒரு பகுதியாக சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயம் தொடக்கம் மாளிகைக்காடு சந்திவரை உள்ள நவீன மின்விளக்குகளை ஒளிரச்செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

குறித்த  அமர்வில் கடந்த காலங்களில் உறுப்பினர்களாக இருந்து வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் வை.கே. ரஹ்மானின் இடத்திற்கு அலியார் நெய்னா முஹம்மத் என்பவரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருந்த சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் இன்  இடத்திற்க்கு முகம்மட் மன்சூர் சப்ராஸ் என்பவரும்  தமது உறுதி மொழியை வழங்கி கன்னி அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்