முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி

🕔 July 30, 2019

முகத்தை மறைப்பதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவர, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமயில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, நீதியமைச்சர் தலதா அத்துக்கொரள இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தற்போது முகத்தை மூடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, முகத்தை மூடுவதை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான சட்டத்தைக் கொண்டு வருவதற்கு, அமைச்சரவை இன்று அனுமதியளித்தது.

இதன் பிரகாரம் நிகாப் மற்றும் புர்கா அணிவதற்கு நிரந்தரத் தடை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்