இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது
இலங்கையில் நபரொருவரின் வருடாந்த அரிசி நுகர்வு 169 கிலோகிராம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வு 132 கிலோகிராம் என்றும், பழங்களின் நுகர்வு 42 கிலோகிராம் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.