பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர்
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக் குறிப்பிடும் போது, அந்தப் பெயர் தடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எதிர்காலத்தில் ‘அபே ஹாமதுருவோ’ (எங்கள் மதகுரு) எனும் புனைப் பெயரை, தனது பெயராக ஞானசார தேரர் பயன்படுத்துவார் எனவும், டிலந்த கூறியுள்ளார்.
அதேவேளை, பொதுபல சேனா அமைப்பும் எதிர்காலத்தில் ஞானசார தேரரை ‘அபே ஹாமதுருவோ’ என்றே, பேஸ்புக்கில் குறிப்பிடும் என்றும், டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.