டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

🕔 July 27, 2019

டொக்டர் எஸ். முஹம்மட் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு இடை யூறு ஏற்படுத்தியமை தொடர்பில், குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டாரவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது..

குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி டொக்டர் ஷாபி தொடர்பில், மூன்று விஷேட மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குருணாகல் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.

இதன்போது அந்த அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக, தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த மூன்று விஷேட மருத்துவர்களிடமும் மீண்டும் வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் குருநாகல் போதனா மருத்துமனையின் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்