சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அமைச்சரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவை சிலர் முன்மொழிந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான கபீர் ஹாசிம், அமைச்சர்களான அஜித் பெரேரா, மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோர் கூறினர்.
ஆயினும், ஓகஸ்ட் 05ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, இறுதி முடிவு எடுப்பதென அங்கு தீர்மானிக்கப்பட்டது.