இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது: நில அளவையாளர் நாயகம் தெரிவிப்பு

🕔 July 23, 2019

லங்கையின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் எஸ்.எம்.பி.பி. சங்ககார தெரிவித்துள்ளார்.

புதிய வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இந்த வரைபட தயாரிப்பு பணி மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. தற்போது அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய வரைபடத்தில், துறைமுக நகரம் உள்ளிட்ட 25 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து மாற்றங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக இலங்கை வரைபடம், 1995ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

இந்த ஆண்டில் இருந்து வரைபடத்தை புதுப்பிக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்