முன்னாள் உறுப்பினரைத் தாக்கிய குற்றச்சாட்டில், பெலியத்த பிரதேச சபைத் தவிசாளர் கைது

🕔 July 22, 2019

பெலியத்த பிரதேச சபை தவிசாளர் சிறில் முனசிங்க இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே இவர் கைதானார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறில் முனசிங்க இன்று காலை பெலியத்த பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சந்தேக நபரை இன்று தங்கல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்