அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவு

🕔 July 21, 2019

ரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு, நிதி அமைச்சு சுற்றறிக்கை பணித்துள்ளது.

சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு, நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர், நாட்டின் பொருளாதாரம், அரசின் வருமானம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கவனம் செலுத்தி, அரச நிறுவனங்களின் வீண்விரயங்களை தவிர்க்கும் நோக்கில் நிதிகளை செலவிட வேண்டும் என்று, அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம், தொலைபேசிப் பாவனை, எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றில் சிக்கனத்தைக் கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்