கடவுளின் கை

🕔 July 15, 2019

லகக் கோப்பை கிறிக்கட் போட்டியில் சாம்பியன் பட்டம் – நேற்று இங்கிலாந்தை சென்றடைந்தது. இதுவரை நடந்த உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளில் மிகவும் பரபரப்பானதும், வித்தியாசமானதாகவும் அமைந்த போட்டி இது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய ஊடகவியலாளர் யுவகிருஷ்ணா, இந்தப் போட்டி குறித்து எழுதியுள்ள கருத்துக்களை வாசகர்களுக்காக வழங்குகின்றோம்.

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தலையெழுத்தையே தீர்மானித்தது, இங்கிலாந்து விளையாடிய கடைசி ஓவரில் விழுந்த ஓவர் த்ரோ.

ஸ்டோக்ஸ் ஓடி வந்து க்ரீஸை ரீச் செய்தபோது, அவரது மட்டையில் த்ரோ வீசப்பட்ட பந்து பட்டு, பவுண்டரி ஆனது. உடனே ஸ்டோக்ஸ் ‘நான் எதுவும் வேண்டுமென்றே செய்யவில்லை’ என்று கையை உயர்த்தி ஹேண்ட்ஸ் அப் போஸ் கொடுத்தது அழகுதான்.

ஆனால் – அதை பவுண்டரியாக அம்பயர் தர்மசேனா அறிவித்தது சரியா?

ரன் எடுக்கும்போது வீசப்படும் த்ரோவை பேட் கொண்டு தடுப்பது தவறு. யதேச்சையாகதான் பட்டது என்றாலும் அதற்கு ஃபோர் கொடுத்தது தவறிலும் தவறு.

ஹிட் விக்கெட்டும் யதேச்சையாக நடப்பதுதானே? அது அவுட்டில்லை என்று மன்னித்து விட்டுவிட முடியுமா? விதியென்றால் விதிதான். கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேம் என்பதன் அர்த்தத்தை இழந்துவருகிறது.

அதிலும் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய சூழலில் இங்கிலாந்து அணிக்கு சாதகமான முடிவை அம்பயர் எடுத்தது எவ்வகையில் ஸ்போர்ட்மேன்ஷிப் ஆகும்?

1986 கால்பந்து உலகக்கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இதே இங்கிலாந்துக்கு எதிராக அர்ஜெண்டினாவின் மாரடோனா போட்ட ‘கோல்’ மாதிரி ‘கடவுளின் கை’ செய்த சேஷ்டையாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இங்கிலாந்து இம்முறை கோப்பையை வெல்லவில்லை. நியூஸிலாந்திடமிருந்து பிடுங்கி தர்மசேனா எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களின் மனங்களில் வேர்ல்டு சாம்பியன் நியூஸிலாந்துதான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்