மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை

🕔 July 15, 2019

ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில், இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில், தனது கட்சியுடன் நேரடி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் இனைத் தெரிவித்தார்.

எமக்கு அவசரம் இல்லை. முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக பதவி விலகினோம். அதே போல் பதவிகளை ​பொறுப்பேற்பதென்றால் ஒன்றாகவே பொறுப்பேற்போம்.

பிக்குவுக்கு பயந்து நாம்  பதவி விலகவில்லை. நாட்டின் மீது இருக்கும் பற்று காரணமாகவே நாம் பதவி விலகினோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்