கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொறுப்பதிகாரி
– பாறுக் ஷிஹான் –
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச். சுஜீத் பிரியந்த இன்று வியாழக்கிழமை கடமையினை பொறுப்பேற்றார்.
ஏற்கனவே பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதியவர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை 9.30 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சமயத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸார் சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே. ஜெயநித்தி, நாரேன்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.