மரண தண்டனைக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
458 பேர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களில் 04 பேரின் மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.
போதைப் பொருள் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கே, இவ்வாறு மரண தண்டனை அமுலாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பான செய்திகள்: மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம்