கப்பம் வழங்க மறுத்த, முஸ்லிம் வர்த்தகருக்கு கத்திக்குத்து: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம்
– அஷ்ரப் ஏ சமத் –
தெஹிவளையில் ஹார்ட்வெயார் விற்பனை நிலைய உரிமையாளரான முஸ்லிம் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் கப்பம் கேட்டு, அதனை வழங்க மறுத்தமையினாலேயே, விற்பனை நிலைய உரிமையாளர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தெஹிவளை காலி வீதியில் உள்ள ஜெயலங்கா ஹார்ட்வெயார் விற்பனை நிலைய உரிமையாளரான 60 வயதுடைய அப்துல் அசீஸ் என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கத்துக்குத் திற்கு இலக்கான அப்துல் அசீஸ் களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அவர் தனியே விற்பனை நிலையத்தில் இருந்துள்ளார்.