அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

🕔 June 23, 2019

ரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் ஆதரவுடனேயே 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்