கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன
கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வந்த உண்ணா விரதம் மற்றும் சத்தியாகிரக நடவடிக்கைகள் இரண்டும் முடிவுக்கு வந்துள்ளன.
உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை தமிழர் தரப்பு நடத்தி வந்தது.
இந்த உண்ணா விரத நடவடிக்கையில் கல்முனை விகாராதிபதியும் கலந்து கொண்டார்.
இதேவேளை இன ரீதியானதும் – நிலத்தொடர்பற்றதுமான பிரதேச செயலகம் ஒன்றை வழங்கக் கூடாது எனக் கோரி, கல்முனையில் சத்திரயாக்கிர நடவடிக்கையை முஸ்லிம்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு ஞானசார தேரர் வந்தமையினை அடுத்து, சாகும் வரையிலன உண்ணா விரதம் கைவிடப்பட்டு, அடையாள உண்ணா விரதமாக அது தொடர்ந்தது.
இதேவேளை, முஸ்லிம்களின் சத்தியாகிரகமும் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையிலேயே தமிரழ் தரப்பு தமது உண்ணா விரத நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து முஸ்லிம்களும் தங்கள் சத்தியாக்கிரக நடவடிக்கையை முடிவுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.