ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா

🕔 June 21, 2019

மெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கான தொடக்க கட்ட வேலையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டிருந்த போது, தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்ததாக அந்த செய்தி விவரிக்கிறது. ஆனால், இதுதொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்