கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர

🕔 June 21, 2019

ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைக்கு, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் விரைந்து தீர்வு வழங்கப்படும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு, ஒரு சுயாதீன பிரிவாக செயற்பட வேண்டிய அவசியம் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எழுப்பிய பிரச்சினையைத் தொடர்ந்து, 2019 ஏப்ரல் மாத ஆரம்பத்தில், பிரதமரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில், அப்பிரிவுக்கென ஒரு தனியான கணக்காளர் நியமிக்கப்பட்டார்.

தற்போது அவர் மாவட்ட செயலகத்திலிருந்து அவர் செயற்படுகிறார்.

மேலும் இது தொடர்பான காணி மற்றும் கிராம அலுவலர் பிரிவு பற்றிய பிரச்சினைகள் குறித்தும், தொடர்புடைய கட்சிகளின் பிரதிநிதிகளை இணைத்து, 2019 ஏப்ரல் மாதம், ஒரு தேசிய குழுவும் நியமிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக, இந்தக் குழுவின் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளன.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினை எதிர்வரும் 03 மாதங்களுக்குள் விரைவாக தீர்த்து வைக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்