அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம்

🕔 June 21, 2019

ல்­முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில்  நேற்று வியாழக்கிழமை காலை உள் நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபை அமைச்சில்  கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஞானசார தேரர்  பிரவே­சித்­த­மை­யினால்  அங்கு பெரும் பர­ப­ரப்பு  ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க  அதிபர் மற்றும்  பிர­தேச செய­லா­ளர்கள் மற்றும்  அமைச்சின் செய­லா­ளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்­டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடை­ந­டுவில்  உட்­பு­குந்த  கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர்; கல்­முனை உப பிரதேச செய­ல­கத்­தினை தர­மு­யர்த்­து­வதில் காண்­பிக்­கப்­படும்  கால­தா­மதம் தொடர்பில் கடும் அதி­ருப்தி   தெரி­வித்­துள்ளார். 

“இந்த விட­யத்தில்  இழுத்­த­டிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்றது. அம்பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் இதில் உரிய நட­வ­டிக்கை எடுக்கவில்லை. 

கிழக்கில்  பல்­வேறு கிரா­மங்­க­ளுக்கு அரா­பிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ன.  இஸ்­லா­மாபாத் என்று ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.  இத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு  ஏன் அனுமதிக்கின்றீர்கள்” என்றும்   ஞான­சார தேரர் இதன்போது கேள்ளியெழுப்பினார்.

ஞான­சார தேரர் கூறிய விடயங்களைச் செவியுள்ள அமைச்சர் வஜிர அபேவர்த்தன, அம்பாறை மாவட்ட  செயலாளர் உட்பட அதிகாரிகளின்  செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்