அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது

🕔 June 20, 2019

ரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிக்கப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருட இறுதிப் பகுதியில் மீண்டும் திருத்தியமைப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

ஜுலை 01ஆம் திகதி தொடக்கம், அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. 

உதவி சுங்க அத்தியட்சகர்கள் பதவிக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்துக்கொண்ட போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். 

134 பேருக்கு இதன்போது நியமனங்கள் வழங்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்