ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை

🕔 June 20, 2019

பாறுக் ஷிஹான்

ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று வியாழக்கிழமை வருகை தந்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி உண்ணா விரதம் மேற்கொள்கின்றவர்களின் சுகநலன்களை இதன்போது ரத்ன தேரர் விசாரித்து அறிந்து கொண்டார்.

ரத்த தேரரின் தலைக்கு மேலாக மஞசள் சீலை பிடிக்கப்பட்டு, பெரும் வரவேற்புடன் அவர் போராட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உடன் வந்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ரத்ன தேரரின் வருகையின் பின்னர், மட்டக்களப்பு விகாராதிபதியும் அவ்விடத்திற்கு சென்று உண்ணாவிரதத்தில் உள்ள கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் க.கு. சச்சிதானந்தம் சிவம்,  கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா. சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்