இன ரீதியாக உருவாக்க முயற்சிக்கும் பிரதேச செயலகத்துக்கு எதிராக, கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம்
🕔 June 20, 2019
– அஹமட் –
இனத்துவ ரீதியிலும், நிலத் தொடர்பற்ற வகையிலும் கல்முனையில் உருவாக்குவதற்கு எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி இன்று வியாழக்கிழமை, கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டமான்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுடன் முஸ்லிம் மக்களும் இந்த சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருமாறு, கடந்த திங்கட்கிழமை முதல், கல்முனை உப பிரதேச செயலத்தின் முன்பாக, உண்ணா விரத நடவடிக்கையொன்று இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையிலேயே, இனத்துவ ரீதியிலும் நிலத்தொடர்பற்ற வகையிலும் கல்முனையில் உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படும் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி, முஸ்லிம் மக்களும் சத்தியாக்கிரக நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்