ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை: மஹிந்த

🕔 June 19, 2019

னாதிபதித் தேர்தலுக்கான தமது தரப்பு வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

நேற்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக பலர் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்த போதிலும், இன்னும் உறுதியாக வேட்பாளர் ஒருவரை, தாம் தெரிவு செய்யவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் கோட்டாபய ரஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்கிற பேச்சுகள் அரசியலரங்கில் இருந்து வந்த நிலையில், சமீப காலமாக அவரின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷதான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான விடயத்தைக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்