நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம்

🕔 June 14, 2019

கைது செய்யப்பட்டுள்ள குகுணாகல் வைத்தியர் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது, கருத்தடையை ஏற்படுத்தும் பொருட்டு எந்தவொரு நபரின் பலோப்பியன் குழாயிலும் சேதத்தை ஏற்படுத்தியதை தாம் கண்டதில்லை என்று, அவருடன் பணியாற்றி 70 தாதியர்களில் 69 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

குற்றப் புலனாய்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, மேற்படி தாதியர்கள் இந்தப் பதிலை வழங்கியுள்ளனர்.

வைத்தியர் ஷாபியிடம் பணியாற்றிய தாதியர்களில் ஒருவர் மட்டும் வாக்குமூலம் வழங்கவில்லை என்றும், அவர் கொழும்பில் சிகிச்சை பெற்று வருவதாலேயே, இந்த விசாரணைக்கு வர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்தடையை ஏற்படுத்தும் செயன்முறையானது ரகசியமாகச் செய்யக் கூடியதல்ல எனவும், குறித்த தாதியர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

தான் மேற்கொண்ட சிசேரியன் அறுவை சிகிச்கையின் போது, சுமார் 08 ஆயிரம் பெண்களுக்கு வைத்தியர் ஷாபி கருத்தடை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்